சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே T.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி வேலை பார்க்கும் இடத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது,
இறந்த கணவரின் உடலை மீட்டுத்தருக் கோரி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் 2 குழந்தைகளுடன் மனைவி சவுந்தரம்
மனு அளித்தார்.
தனது கணவரைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகவும் இறந்தவரின் உடலைக் காண வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.












