தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து புதிய வங்கி கிளையை திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு புதிய வங்கி பாஸ் புத்தகத்தை வழங்கினர். இதில் புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








