ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம், நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த 11-ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் தினமும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.















