தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தயாராகி வந்த நிலையில், அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
ஒரு பக்கம் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் போராடினார். மற்றொரு பக்கம் அதற்கு போட்டியாக கே.எஸ். அழகிரிக்கு ஆதரவாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரஞ்சன் குமார் போராட்டத்தை நடத்தினார். சத்தியமூர்த்தி பவனின் உள்ளே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை – தென்னரசு, உதகமண்டலம் – கணேஷ், மேலூர் – ரவிச்சந்திரன், ஊத்தங்கரை (தனி) ஆறுகமுகம், கிள்ளியூர்- ராஜேஷ்குமார், ஸ்ரீவை குண்டம் – அமிர்தராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – மாதவராவ். கள்ளக்குறிச்சி (தனி) – மணிரத்தினம், ஓமலூர் – மோகன் குமாரமங்கலம், விருத்தாச்சலம் – ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி – ராமச்சந்திரன், சிவகாசி – அசோகன், ஈரோடு கிழக்கு – திருமகன் ஈவேரா திருவாடனை – கருமாணிக்கம் ஆகியோரும்,
பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகர், சோளிங்கரில் முனிரத்தினம், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, கோயமுத்தூர் தெற்கில் மயூரா ஜெயக்குமார். தென்காசியில் பழனி, காரைக்குடியில் மாங்குடி, நாங்குநேரியில் ரூபி மனோகரன் ஆகியோரும் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் (வசந்தகுமார் மகன்) அறிவிக்கப்பட்டுள்ளார்.















