ஒன்றிய அரசு என்று சொல்ல தடை இல்லை: உயர்நீதிமன்றம்

0
1127


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு, மத்திய அரசை “ஒன்றிய அரசு” என்று கூறிவருவது இறையாண்மைக்கு எதிரானது  என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இது போன்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசு “ஒன்றியம்”என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்றும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதலமைச்சரும், அமைச்சர்களும் சட்டமன்றத்தில் இது தான் பேச வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று கூறிய நீதிபதிகள், ’’ஒன்றிய அரசு” என்று சொல்ல தடை இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here