பூடானில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடான் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தபோது திடீரென விபத்தில் சிக்கியது.
இந்திய ராணுவ அதிகாரி ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது, அது அருகிலுள்ள மலை மீது மோதியது. இதில் இந்திய மற்றும் பூடான் இராணுவ அதிகாரிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














