பாகிஸ்தான் சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான நிலநடுக்கத்தால் அதிர்ந்தன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கீஞ்சார் ஏரிக்கு வடமேற்காக 40 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில், வழிபாட்டாளர்கள் ஃபஜ்ர் தொழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர், அதே நேரத்தில் பெரும்பாலான குடிமக்களால் நடுக்கத்தை உணர முடியவில்லை.
ஹைதராபாத், தட்டா, ஜாம்ஷோரோ, கோத்ரி, நூரியாபாத் மற்றும் செஹ்வான் , ஸ்வாட், சையத் ஷெரீப், ஷாங்லா, புனர், லோயர் டிர், அப்பர் டிர், சித்ரால், மலகாண்ட் மற்றும் பெஷாம் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால், உயிர், சொத்து இழப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.