டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தமிழுக்கு மதிப்பெண் குறைப்பு

0
1285

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 தேர்வில் புதிய பாடதிட்டத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதனால்  தமிழுக்கு இதுவரை வழங்கப்பட்ட மதிப்பெண்குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டது தமிழ் படித்து வரும் தமிழில் படித்து வரும் பின்தங்கும் நிலை உள்ளது.முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சிக்கும், ஐஐஏவுக்கும் தனித்தனியாக தேர்வு நடத்துவதால் நேரமும் பணமும் அதிகரிக்கிறது. அதை மிச்சப்படுத்த இந்த நடவடிக்கை என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கூறுகிறது.

ஆனால்  தமிழ்நாட்டு தேர்வர்களை வடிகட்டி  பிற மாநிலத்தவர் அதிக எண்ணிக்கையில் இடம்பெற இது வழிவகுக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் , மாநிலத்தில் நடத்தவேண்டிய தேர்வுகளை மத்திய தேர்வோடு ஒருங்கிணைத்து , சுயேட்சை தன்மையை இது கெடுக்கும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here