பொதுத்தேர்வில் அலட்சியம்: ஆசிரியர் அல்லாதவர் கண்காணிப்பாளராக நியமனம்

0
699

மாநிலம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வர்கள் மோசடி நடைபெறக்கூடாது என்பதற்காக கல்வித் துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. கல்வி அமைச்சரும் தகுந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பல இடங்களில் தேர்வு நடைமுறையில் குழப்படி ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் சில இடங்களில் ஆசிரியப் பணியில் அல்லாதவர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.

பேட்டை காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தேர்வில், பாளை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் தனக்கு பதிலியாக ஆசிரியராக அல்லாத ஜான் நல்லதம்பி என்பவரை அனுப்பியுள்ளார். அதையும் ஏற்று இரு நாட்களாக கல்வி அலுவலர்களால் தேர்வு பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இது போன்று வேறு சில தேர்வு மையங்களிலும் நியமன முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது

இவ்வாறான, தகுதியற்ற கண்காணிப்பாளர்களால் தேர்வு பணி முறையாக நடக்க முடியாமல் போய்விடுகிறது. தனக்கு வழங்கப்பட்ட பணியை அசட்டையாக ஆசிரியர் அல்லாத ஒருவருக்கு வழங்கிய ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர், இந்த மோசடியை அனுமதித்த கல்வி அலுவலர் ஆப் யுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உண்மையான ஆசிரியர்கள் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here