ராஜஸ்தானில் கோர விபத்து -15 பேர் பலி

0
1491

ராஜஸ்தானில் ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் சாலையில் தாதனியா காவல் நிலையத்திற்கு அருகில் சாலையில் காரும் மினி வேனும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்திற்கான காரணம் குறித்து உறுதிபடுத்தப்படவில்லை. சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 8 ஆண்கள் 6 பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் அருகில் இருந்த கிராமவாசிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பாலேஷ்வர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் 15 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here