அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சசிக்குமாரின் நாடோடிகள் படத்தின் முதல் பாகத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை காவலர் ஆணையத்தில் அவர் அளித்த புகரில், ‘ அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக கூறியதால் ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தோம். என்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தார்.
தற்போது என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு அடித்து துண்புறுத்தி என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார். ’ என அதில் தெரிவித்துள்ளார்.













