நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து கர்நாடகவை சேர்ந்த இருவர் பலி இருவர் படுகாயங்களுடன் நல்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தின் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது திருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் என்பவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கங்கைகொண்டான் போலீசார் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததுடன் விபத்தில் சிக்கியவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட காரில் இருந்த ஸ்ரீகாந்தன்(50)மற்றும் அவருடன் பயணித்த பிரேமா தேவி(68) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
மேலும் காரில் படுகாயங்களுடன் இருந்த சசிகலா(45) தனுஸ்ரீ (7) ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.