விஐபிகளிடம் மாணவிகளை அனுப்பி அரசு ஒப்பந்தம் பெற்ற மோசடிப்பெண் கைது

0
483

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் ரீதியில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் பெண் மீது புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பணம் படைத்தவர்களின் உல்லாச தேவைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அனுப்பி வைத்த கும்பல் ஒன்று, அவர்களின் பாலுறவு காட்சிகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து வைத்துக் ழகொண்டு பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஓட்டுநர் ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிினி, மடிக்கணிினிமற்றும் கைபேசி களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலுக்கு தலைவியாக விளங்கிய ஸ்வேதா ஜெயின் சிறப்பு விசாரணைக்குழுவிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில், கல்லூரி செல்லும் 24 வறிய இளம் பெண்களை மத்திய பிரதேச அரசின் உயர்ந்த மற்றும் வலிமைமிக்கவர்களை கவர்ந்திழுக்கப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டு உள்ளார்.

பொறியின் முக்கிய நோக்கம் பணம் மட்டுமல்ல.இலக்கு வைக்கப்பட்ட வி.ஐ.பிகளிடமிருந்து நூறு கோடியில் இலாபகரமான அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கியதையும் ஸ்வேதா ஒப்புக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here