நெல்லை அருகே வடக்கு தாழையூத்தில் கண்ணன்(35) என்ற இளைஞர் தொட்டி ஆட்டோவில் டேங்கர் வைத்து தண்ணீர் விநியோகித்து வந்தார். இவர் இன்று தண்ணீர் பிடிப்பதற்காக டிரைவருடன் தொட்டி ஆட்டோவில் பண்டாரகுளம் சென்றுள்ளார். டிரைவர் சிறுநீர் கழிக்க சிறிது தூரம் சென்ற நிலையில், சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் வந்து கண்ணனை வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்தவரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவந்த நிலையில் அவர் இறந்தார். இவர் ஒரு பிரிவினருக்கான அமைப்பில் வேலை செய்து பஸ் எரிப்பு வழக்கு உள்ளவர் என்றும், சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்ட மற்றொரு பிரிவு இளைஞர்கள் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் .

படுகொலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அங்கு மேலும் பிரச்சினை ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காணொளி: கீழே








