அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி பங்கேற்று, ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’, ‘நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்’ என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இது உலக அளவில் நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுகிறது.













