சிலை கடத்தல் அதிகாரி ‘பாஷா’ நீதிமன்றத்தில் பலிக்கவில்லை

0
1538

ஆலடிப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் 2008ல் தனது வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டியபோது சில பழங்கால சாமி சிலைகள் கிடைத்தன. அதை கைப்பற்றிய அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காதர் பாஷா, சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் ஆகியோர் ரூ.6 லட்சத்துக்கு கள்ளத்தனமக விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதுகுறித்து சிலை கடத்தல் பிரிவுக்கு புகார் தெரிவித்தும் விசாரிக்காததால் உயர்நீதிமன்றத்தில் மனு செய்து உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து 2017ல் காத்ஃஅர் பாஷாவை கைது செய்தார்.
பின்பு ஜாமீனில் வந்த பாஷா, தன் மீது 9 ஆண்டுகள் கழித்து பொய்யாக வழக்கு தொடுக்கப்பட்டதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், நீதிபதி பாரதிதாசன் அவரது கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here