விலை குறையாவிட்டால் அரசு வெங்காயம் விற்கும்: உண(ர்)வு அமைச்சர் பேச்சு

0
1358

மகாராஷ்டிரா, கர்நடகாவில் கடும் மழை பெய்ததால் இந்தாண்டு தமிழக சந்தைக்கு வெங்காய வரத்து சிறிது குறைந்தது. காத்திருந்த கருப்பு சந்தைக்காரர்கள் விலையை ‘விர்’ரென ஏற்றிவிட்டனர்.
இதனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். அதில், பண்ணை பசுமை கடையில் 45 ரூபாய்க்கு விற்கும் வெங்காயம் கடைகளில் 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வேறொன்றும் பெரிதாக வித்தியாசம் இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து வெளியே வந்த உணவு அமைச்சர், ‘ சில நாட்கள் பார்ப்போம். விலை குறையாவிட்டால் அரசே வெங்காயத்தை வாங்கி குறைந்த விலைக்கு விற்கும்’ என்றார்.
அதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஆந்திராவிலிருந்தும் நாசிக்கிலிருந்தும் வெங்காயம் அதிகம் வரத்தொடங்கிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here