திமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது கண்ணன் என்பவருக்கு ஒதுக்கிய சிட்கோ நிலத்தை தனது மனைவி காஞ்சனா பெயரில் அபகரித்ததாக புகார் கூறப்பட்டது.
இதை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், 3 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என வழக்கை தொடுத்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.













