நெல்லை:ஒருநாள் கொரோனா ஸ்கோர்738

0
371

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஓரே நாளில் 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் மட்டும் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

அம்பாசமுத்திரம் பகுதியில் 43 பேருக்கும் மானூர் பகுதியில் 51 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 21 பேருக்கும் பாளையங்கோட்டை பகுதியில் 74 பேருக்கும் , பாப்பாக்குடி பகுதியில் 13 பேருக்கும் , ராதாபுரம் பகுதியில் 15 பேருக்கும் , வள்ளியூர் பகுதியில் 65 பேருக்கும் , சேரன்மகாதேவியில் 37 பேருக்கும் , களக்காடு பகுதியில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர் . இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக சுகாதார செயலர் கூறியிருக்கும் நிலையில், நெல்லையில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here