வீரவநல்லூர் அருகே பழிக்குப்பழியாக பாத்திரக் கடைக்காரர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் உப்பாத்து காலனி அருகே உள்ள டாஸமாக் கடையில் பாத்திரக்கடை உரிமையாளரான மாரியப்பன் (30) என்பவர் மதுஅருந்த சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்களநபர்கள் அவரை சூழ்ந்தனர்.
மாரியப்பன் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார் ஆனால் அவர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த படு கொலை நடந்ததாக கூறப்படுகிறது.