திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கத்தியனூர் அரசம்பட்டி பகுதியிலுள்ள குப்புசாமி மகன் துளசி (42) கடந்த 30 வருடங்களாக சாராய வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துளசி தன் நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 20 சாராய பேரல்களை திருப்பத்தூர் கலால் காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான திருப்பதி35) மற்றும் அவரது மனைவி சங்கீதா(30) மீது நிலத் தகராறு செய்து கொண்டிருந்த துளசி தன் மீது உள்ள காழ்ப்புரட்சியின் காரணமாக கலால் காவல்துறையினரிடம் தன்னுடைய சாராய பேரல்கள் குறித்து திருப்பதியும் சங்கீதாவும் தகவல் கொடுத்துள்ளார்கள் என்று தவறாக கருதி அதன் பேரில் தான் கலால் காவல்துறை தன்னுடைய இருபது பேரல்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று நினைத்துக் கொண்டு ஆத்திரமடைந்த துளசியின் மகன்கள் தினேஷ்(22) சந்தோஷ்(20) துளசியின் மனைவி கோவிந்தம்மாள்(40) மற்றும் மாமனார் ஆறுமுகம்(60) ஆகியோர் திருப்பதி மற்றும் சங்கீதாவை தாக்கியுள்ளனர்.
அப்பொழுது சம்பந்தமே இல்லாமல் சங்கீதாவின் மாமனார் மணி(55) என்பவரை துளசி குடும்பத்தினர் கத்தியால் சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்பு தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வரும் நிலையில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் சிறிதளவும் அச்சமின்றி காவல்துறையை கையில் போட்டுக்கொண்டு மேலும் மேலும் சாராய வியாபாரம் செய்யும் துளசியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சாராய வியாபாரிக்கு துணைபோகும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.












