தாறுமாறாக காரோட்டி தொழிலாளியை கொன்ற புது மாப்பிள்ளை கைது

0
1520

மதுரை மேலமடையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு இன்று காலை திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது காரை கோமதி புரத்தில் தாறுமாறாக ஓட்டிச்சென்றார். இதனால் அங்கு துப்புரவுப்பணியில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியது.
இதில் தமிழரசன் என்ற தொழிலாளி இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி இன்று அவருக்கு நடக்கவிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here