நாங்குநேரி இடைத்தேர்தல் : போட்டிக்கு பிரபலங்கள் போட்டி

0
1604

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பியும், அதிமுகவின் வழக்கறிஞர் அணிச் செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார்.

எம்பி தான் ஆக முடியவில்லை எம்எல்ஏவாவாது ஆகிவிடலாம் என்று மனோஜ் பாண்டியன் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதுவும்  தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிவிட்டதால் இடைத்தேர்தலில் அதிமுக எளிதில் வெல்லும் என்பது மனோஜ் பாண்டியனின் எண்ணமாக உள்ளது.

இது போல் அதிமுக நட்சத்திரபேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.கவர்ச்சி அரசியலின் நம்பிக்கையில் அவர் தயாராகையில், தனது தம்பியின் காலியிடத்தை பிடித்துவிட குமரி அனந்தன் முயல்கிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர் குமரி ஆனந்தன் விருப்பமனு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here