நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை

0
517

தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 412 அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பின்னர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here