தூத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மழை வளம் வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டியும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை சக்தி பீடத்தலைவர் கிட்டப்பா தொடங்கி வைக்க ஊர்வலம் சக்தி பீடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கருவறை அன்னை ஆதிபராசக்திக்கு மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 பெண்கள் பாலாபிஷேகம் செய்து வேண்டினர். தொடர்ந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.








