”தள”பதி நினைவு நாளில் குவிந்த தலைகள்

0
689

மன்னர் பூலித்தேவனின் படைத் தளபதியாக இருந்தவர் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன்.பூலித்தேவனின் போர் வாள் என்றும் புகழப்படும் ஒண்டிவீரனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில் ஒண்டிவீரனின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 தமிழக அரசு சார்பில் சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள  ஒண்டிவீரனின் திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால், அமைச்சர்  வி.எம். ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் . நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், நெல்லை எம்எல்.ஏ., ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்

பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர், தேமுதிக சார்பில் மாநகர பொருளாளர் ஜெயச்சந்திரன், மதிமுக சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு ராசேந்திரன் தலைமையில் தொண்டர்கள் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், முன்னாள் எம்பி ராமப்பு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஆதித் தமிழர் பேரவை . தமிழ்புலி அமைப்பு. சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சிவகிரி, சங்கரன்கோவில், நடுவக்குறிச்சி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here