திருவனந்தபுரம் செல்லும் முன் சென்னை அண்ணாமலை பாடல் அண்ணாமலை பாடல் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி:-
அதிமுக கட்சி மாநிலம் முழுவதும் நடத்தும் போராட்டம் நியாயமானது. நியாயமான போராட்டம் என்பதால் மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு உள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. பலமுறை சுட்டிக்காட்டி உள்ளது. 75 நாட்களாகியும் எந்தொரு முக்கியமான வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
பெட்ரோல் விலை, நீட் உள்பட, சொல்லிவிட்டு இப்போது காரணத்தை கண்டுபிடித்து உள்ளனர். சொன்னோம் செய்ய முடியவில்லை என காரணத்தை சொல்லுகின்றனர்.
அரசியலில் தமிழகத்தில் தரும் வாக்குறுதி எதிர்ப்பார்ப்பை தரும். பொய்யை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்து உள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். திமுக மீனவர்களுக்கு எதிரான செயல்படிவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
திமுக சொன்ன ரூ.5 மட்டும் குறைக்க கூடாது. ஆட்சிக்கு வந்த பின் கூடுதலாக ரூ.1.25 சம்பாதித்து உள்ளது. நியாயப்படி ரூ. 6.50 வரை குறைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும். பெட்ரோல் விலையை குறைக்க ஒரு சிஸ்டம் வைத்து குறைக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சொன்ன விசயத்தை ஏன் செய்யவில்லை என்பதற்காக தான் போராட்டம்.
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என்று பா.ஜ.க. சொல்லவே இல்லை. பெட்ரோலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்.













