வழக்குப் பதிந்து ஒரு மாதம் ஆகியும் லஞ்ச இன்ஸ்பெக்டரை கைது செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

0
1112

மதுரையில் கூலி தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அப்போது, ‘அரசு பணியாளர்கள் முறைகேடுகளில், ஈடுபடுவதை ஏற்க இயலாது’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. வழக்குப் பதிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்ஸ்பெக்டரை இன்னும் கைது செய்யாதது ஏன்? இதுபோல, தாமதப்படுத்துவது மனுதாரருக்கு சாதகமாக அமைந்துவிடாதா? என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற, செயல்களால் பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்றும் கவலை தெரிவித்தனர். மேலும், காவல் ஆய்வாளர் வசந்தி, ஓட்டுநர் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here