துபையிலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா

0
769

மதுரை விமான நிலையத்தில்  இன்று துபாய் மற்றும் கொழும்பிலிருந்து வந்த பயணிகளுக்கு   கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


துபாயில் இருந்து வந்த 141 பயணிகளுக்கும் கொழும்பிலிருந்து வந்த  119 பயணிகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


அதில் ,துபாயில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டம் , புதுார் பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணன் (வயது 39).
என்பவருக்கு,  கொரோனா தொற்று உறுதியானது.


இதனையடுத்து அவரை 7 நாட்கள் தனிமையில் வைக்க தமிழக சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.


மேலும், அவருக்கு ஒமிக்கிரான் தொற்று உள்ளதா என அறிய சளி மாதிரி சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here