சிறுமியை தாக்கிய டியூசன் டீச்சர் கைது

0
1483

குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வருவதற்காக சிறுமியை கொடூரமாக தாக்கிய டியூஷன் டீச்சரை பற்றி வாட்ஸப் மூலம் தகவல் பரவியது. டியூசன் டீச்சர் சிறுமியின் தாயாரின் தோழி என்பதும் வெளியானது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்த செய்தி பரவிய நிலையில், குமரி மாவட்ட குழந்தை நல அலுவலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சிறுமியின் தாயாரான ஞானத்தாய் மூலம் புகார் பெற்று டியூசன் டீச்சர் ஜெசி மோளை கைது செய்தனர். சிறுமி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவத்தன்று சிறுமியை டியூசன் டீச்சர் கடுமையாகத் தாக்கியதோடு, அவர் காயமடைந்தகாயமடைந்தது வெளியில் தெரியாமல் இருக்க தன் வீட்டிலவீட்டிலேயே தங்க வைத்து காலையில் தேர்வுக்கு அனுப்பியுள்ளார். தேர்வு அறையில் சிறுமி மயங்கி விழுந்த பிறகுதான் உண்மை தெரிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here