தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் .









