மனுநீதி நாளில் அரங்கை விட்டு வெளியே வந்து மனு வாங்கிய தென்காசி ஆட்சியர்

0
651

 

தென்காசி மாவட்டத்தின் தொடக்க மனு நீதி நாள் முகாம் தென்காசி சுப்பராஜ மஹாலில் இன்று நடந்தது. முதல் மனு நீதி நாள் முகாமுக்கே 400க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்திருந்தனர். புளியங்குடியை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மனு அளித்தனர்.
மதிமுக மாவட்ட செயலாளர் திமு ராஜேந்திரன், ‘ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் அமைக்கக்கூடாது. தென்காசி & மதுரை சாலையில் அமைக்கவேண்டும். இல்லையேல், மக்களை திரட்டி போராடுவோம் என மனு அளித்தார். திமுகவினரும் கிராமப்பகுதியை விட்டு, பிரதானமான இடத்தில் ஆட்சியர் அலுவலகத்தை அமைக்க மனு அளித்தனர்.
முதல் முகாமில் மஹாலுக்கு வெளியே ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன் வந்து அமர்ந்திருந்தனர். இதை அறிந்த ஆட்சியர் மஹாலை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டே அவர்களிடம் மனு பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here