இலங்கை தேர்தல்: கோத்தபய வெற்றி

0
768

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி கோத்தபய ராஜபக்சே வெற்றி நிலையில் உள்ளார். இந்த தேர்தலில் ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய கூடமைப்பு, புதியஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தது. வேட்பாளராக நின்ற சிவாஜிலிங்கத்தால் சிறிது வாக்குகள் சிதறியதே தவிர, 80{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}க்கு மேல் சஜித்துக்கு வாக்குகள் கிடைத்தன. திரிகோண மலையில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்கு பெற்றார். அங்கு புதிய சிங்கள குடியேற்றத்தினர் வாக்குகளால் அவர் அதிகம் பெற்றார்.
பெரும்பான்மையினரான சிங்கள இனத்தவரின் ஆதரவு எப்போதும் இன ஒடுக்குமுறையாளரான ராஜபக்சே சகோதரர்களுக்கு சாதகமாக இருப்பதால் அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. அந்த துணிச்சலில் 40{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அவரது கட்சி இணையத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1,20,000ல் 80,00,000 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் எனினும் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வெற்றி தமிழர்களுக்கு சாதகமாக இருக்காது. போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட தமிழருக்கான நீதி கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் தலையிட்டால் ஒழிய தமிழருக்கான கோரிக்கை இனியும் பின்னுக்கு தள்ளப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here