மாமல்லபுரத்தில் சீனா அதிகாரிகள் ஆய்வு

0
1386

வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார். 2 நாட்கள் இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் தங்கி பேச்சு நடத்த உள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பாக சீன அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

சீன வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறையை சேர்ந்த 50 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழக போலீசாருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். சீன அதிபர் பார்வையிட உள்ள வெண்ணை உருண்டை கல், அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளனர். இக்குழுவினருடன் சீன அதிபரின் தலைமை பாதுகாவலர், தனி செயலாளர், மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here