லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளைக்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைகடையில் பக்கவாட்டு சுவரில் கன்னமிட்டு கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் வாகன தணிக்கையின்போது கொள்ளையன் ஒருவன் போலீசிடம் சிக்கினான்.
பைக்கில் வந்தவர்களை மடக்கியபோது மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் சிக்கினார். அவனிடமிருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மற்றொரு கொள்ளையனான சீராத்தோப்பு சுரேஷ் தப்பியோடிவிட்டான்.