பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சு பெரிய வைரலாகி உள்ளது. “இருக்க வேண்டியவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். சரியானவர்களை சரியான இடத்தில் அமர வைக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை, அவர்களும் நாட்டின் குடிமக்களே. நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.
எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்அவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு கோவில், மசூதி மற்றும் சர்ச் நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.















