தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்கனவே டிஎஸ்பியாக இருந்த கென்னடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய டிஎஸ்பியாக சுபக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற அவர் சாத்தான்குளம் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டத்தை முறையாக தடுத்து நிறுத்தி கும்பலை முற்றிலும் ஒழித்து கட்டுவோம் என தெரிவித்துள்ளார்.









