தூத்துக்குடி மாவட்டம் பனைவிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்கள் நலனுக்காக செயல்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இந்து மகா சபையின் தலைவர் சுந்தரவேல் தலைமையிலான அதிகாரிகள் வட்டார கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.







