தூத்துக்குடி மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கு விசாரணை இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் மனு மீது அக்டோபர் 16அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவரும் தற்போதய தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா கோஷமிட்டார்.
இது குறித்து தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர். மாணவி சோபியா டாக்டர் தமிழிசைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் முறையீடு செய்தார். செய்தார் அந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.











