சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், போரூர், ஐயப்பன் தாங்கல், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர், கொரட்டூர், திருவள்ளூர், மாதவரம், புழல், செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,அடையார், எம்.ஆர்.சி.நகர், பூவிருந்தவல்லி, ஆவடி, திருநின்றவூர்,அம்பத்தூர், அசோக்நகர், வளசரவாக்கம்,வில்லிவாக்கம்,மதுரவாயல்,மடிப்பாக்கம்,கிண்டி,மீனம்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, கீழ்பாக்கம்,புரசவைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வடபழனி,சாலிகிராமம்,விருகம்பாக்கம்,திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.













