கோவையில் கடந்த சில நாட்களாக நகரில் உள்ள பல்வேறு லாட்ஜ்களிலும் தங்கும் விடுதிகளில் மசா ஜ் செண்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வருவது கண்டறியபட்டு போலிசார் அப்பெண்களை மீட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை புறநகர பகுதியான சூலூர் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைப்பகுதிகளாக அவினாசி சாலை தென்னம்பாளையம் அடுத்த புறவழிசாலை மற்றும் கணியூர் சுங்கசாவடி அருகே உள்ள புறவழி சாலை ஒதுக்குபுற்மாக உள்ளது. இந்த இடத்தில் 5க்கும் மேற்பட்ட விபசார பெணகள் அவ்வழியாக வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களையும் குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களை “வாங்க மச்சான்” என கவர்ச்சியாக பேசி அங்கு காட்டுபகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருக்கின்றனர். அவ்வாறு வராதவர்களை ஒருமையில் பேசி அவமானபடுத்துகின்ற்னர்.
மேலும் இங்குள்ள காட்டுபகுதியிக்கு அழைத்து சென்ற பின்னர் ஏற்கனவே தயாராகவுள்ள வாலிபர்களை வைத்து மிரட்டி தங்க செயின், பர்ஸ் மற்றும் செல்போனை பறித்து அனுப்பி விடுகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளிக்காமல் பயந்து போய் வேறு வழியின்றி திரும்புகின்றனர்.
இவ்வாறு நாள்தோறும் கணியூர் சுங்க சாவடிக்கு அருகே நின்றுகொண்டு சுங்கசாவடியில் வரிசையில் நிற்கும் வாகன ஒட்டிகளையும் விடாமல் துரத்துவதாகவும் ஆனால் சுங்கசாவடி ஊழியர்கள் இவர்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர் .
மேலும் சுங்கசாவடி அலுவலம் அருகே அமர்ந்து அங்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை விபசாரத்திற்கு அழைப்பது நாள்தோறும் மாலை மற்றும் இரவு நேரத்தில் வழக்கமாக நடைபெறுகிறது. இங்குள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையம் , சூலூர் காவல் நிலைய காவலர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. இதனால் சில நாட்களில் 5க்கும் மேற்பட்ட விபசார பெண்கள் கும்பலாக நின்று அவ்வழியாக செல்வபர்களை கூவிகூவி அழைப்பதாகவும் இரு சக்கர வாகன ஓட்டிகளை வழி மறித்து அழைப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு இப்பகுதியில் வெளிப்படையாக நடக்கும் விபசார அழகிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இலையென்றால் இப்பகுதி கோவையின் விபச்சார பகுதி என கோவைக்கு வருபவர்கள் கருதும் நிலை ஏற்படும். இது தொடர்பாகமாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தபட்ட காவல் துறை மீது நடவடிகை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரக்ள் தெரிவிக்கின்றனர்.