கோவை ரத்தினபுரி அருகே உள்ள செக்கான் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 53). சலவைத் தொழிலாளி. நேற்று இவர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் கடைக்கு சென்று முட்டை வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு சென்றார். அப்போது அந்த வழியாக பெங்களூரில் இருந்து கோவை நோக்கி டபுள் டக்கர் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
ரெயில் வருவதை பார்த்த அவர் நான் நிறுத்தினால் எந்த ரெயிலும் நிற்கும் என கூறியபடி பஸ்சை நிறுத்துவது போல கையை காட்டி ரெயிலை நிறுத்த முயன்றார். இதனை பார்த்த செக்கான்தோட்டம் கேட் கீப்பர் ஆறுச்சாமியை காப்பாற்ற முயன்றார். அதற்குள் ரெயில் அவர் மீது மோதியது.
ரெயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட ஆறுச்சாமி சம்பவஇடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார்.










