ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ரவி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி தெரிவிக்கையில்,’ ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிடப்படவில்லை. மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது.இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக வருகை தந்து மருத்துவ மனைகளில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும், கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் பெறமுடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சசிகலா அதிமுக கட்சியை சேர்ந்த நபர்களிடம் உரையாடுவது போன்ற ஆடியோ வெளியாகி இருப்பது என்பது அதிமுக கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சசிகலா மற்றும் அமுமுக கட்சியை சேர்ந்த நபர்களால் உருவாக்கப்படுகின்ற சூட்சுமம்.
சசிகலா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உதவியாளராக மட்டும்தான் இருந்தார்களே தவிர, வேறு எந்த விதத்திலும் சசிகலாவால் அதிமுக கட்சியின் மீது உரிமை கோர முடியாது. Rசசிகலாவுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.சசிகலாவை அதிமுக கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும்,சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடித்தவர் என்பதால் சட்டப் பிரகாரம் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்பதால் அமுமுக தொண்டர்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்துவதற்காக வதந்திகளை பரப்பி வருகிறார் ‘ என்றார்.