போலீஸ் வேன் மோதி பெண் பலி: 4 பேர் காயம்

0
1202

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 11ஆவது பட்டாலியன் காவலர்கள் அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டிய பாதுகாப்பு பணிக்காக தென்காசிக்கு வந்துவிட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
சொக்கம்பட்டி திரிகூடபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வேன் வந்தபோது நிலை தடுமாறி அங்கு பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது மோதி, பேருந்தி நிறுத்தத்தில் இடித்து நின்றது. இதில், பேருந்துக்காக நின்ற மைதீன் பிச்சை மனைவி ஆயிஷாள் பீவி என்ற மல்லைகா (35) அதே இடத்தில் இறந்தார்.
அவரது மகள் ஆஷிகா (10), திவால் ஒலி மகள் கன்சா பீவி (15) ஆகியோரும், வேனில் வந்த போலீசார் ராசுக்குட்டி (26), முத்து (25) ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here