சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அ அருகே ஏத்தாப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த மூன்றுபேரை நிறுத்தி விசாரித்தபோதுஇடையப்பட்டி யைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து அவரை வாகன தணிக்கையில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி லத்தியால் கடுமையாக தாக்கினார்.இதில் அவர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
முருகேசனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி பெரியசாமி மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.