பேனரை அகற்றுங்கள்: நீதிபதிகள் ஆவேசம்

0
605

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பேனர் தொடர்பான அந்த வழக்கில் , சென்னையில் பேனர் சரிந்து விழுந்து இறந்த மாணவியை நினைவுகூர்ந்த நீதிபதிகள், ‘ இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும், எத்தனை லிட்டர் ரத்தம் கொடுக்கவேண்டும் ?’ என ஆவேசமாக கேட்டனர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மெரினா கடற்கரை சாலையை சேதப்படுத்தி கட் அவுட் வைக்க அனுமதிகொடுத்தது யார்? உடனடியாக பேனர்கள் அகற்றப்படவேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பேனர்கள் அகற்றப்பட்டன. இன்றும் சென்னை மாநகரில் 250 பேனர்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்துக்கட்சி தலைவர்களும் தாமாக முன்வந்து பேனர் வைக்க கட்சியினருக்கு தடை விதித்துள்ளனர்.
குடிகாரன் பேச்சுபோல், விடிந்தால் போகாமலிருந்தால் சரிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here