புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் அங்கு ஆட்சி ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. சந்தடி சாக்கில் திமுக தலைமையிலேயே புதுவையில் இனி ஆட்சி என்று திமுக ஒருங்கிணைப்பாளர் சிவா வேறு பேட்டியளிக்க, எதிர்க்கட்சியினருக்கு தோதாகிவிட்டது.
இந்நிலையில், என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி தலைமையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளுநரை சந்திக்க சென்றனர். அங்கு அவர் இல்லாததால் செயலரிடம் மனு அளித்தனர்.
அதில், ‘ நாராயண சாமி தலைமையிலான காங்., திமுக கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என மனு அளித்தனர்.