புதுச்சேரி வழுதாவூர் ரோடு கவுண்டம்பாளையம் பகுதியில் வட்டிக்கடை நடத்தி வருபவர் நிமிஷந்த் ஜெயின்(50). நேற்று இவர் கடையில் இருந்தபோது கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல்(42) என்பவர் ஒரு மோதிரத்தை அடகு வைக்க வந்தார். அதனை சோதனை செய்த நிமிஷந்த் ஜெயினுக்கு அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வருவதை கண்ட சக்திவேல் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லாஸ்பேட்டையை சேர்ந்த பத்தர் தொழில் செய்யும் ராஜா போலி நகைகளை தயார் செய்து, திலாசுபேட்டையை சேர்ந்த பாப்ஸ்கோ ஊழியர் இளஞ்செழியன் மற்றும் சக்திவேலிடம் கொடுத்து பல்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் வாங்கியது தெரியவந்தது.
கைதான அன்று 2 கடைகளில் அடகுவைத்து விட்டு 3ஆவது கடையில் அடகுவைக்கும்போது சக்திவேல் மாட்டிக்கொண்டார்.














