தமிழ்நாட்டுக்கு மத்திய படையை அனுப்புங்கள்: சுப்பிரமணியசாமி கதறல்

0
1400

சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது முதல் பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி தமிழ்நாடு அரசு மீது காட்டமாக உள்ளார்.

இன்று காலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2019ஆம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது.  தமிழக முதல்வர் இது தொடர்பாக ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும் . மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை  நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here