தென் தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலும் ஒன்றாகும். தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம் நடந்த இக் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது
இந்நிலையில் மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளத்துடன் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நேற்று நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஞ்சள்பெட்டி ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள், சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.














